ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (18:04 IST)

சீர்காழி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதே போல் தினமும் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சீர்காழி தொகுதி அதிமுக எம்எல்ஏ பாரதி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 
 
முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க உள்ள எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சீர்காழி எம்எல்ஏ பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது