திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:55 IST)

கொரோனாவால் தள்ளிப்போன ஹனிமூன் - அப்செட்டில் நடிகர் ராணா!

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டி இரு வீட்டாரின் சம்மதத்தின் படி கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி (நாளை) ராமநாயுடு ஸ்டுடியோஸில் ராணா - மஹீகா பஜாஜ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.


இந்நிலையில் தற்ப்போது பாலிவுட் நடிகை நேஹா தூபியா நடத்தும் No Filter Neha என்ற டாக் ஷோவில் தனது திருமணத்தை குறித்த ராணா பேசியுள்ளார். அதில் ஹனிமூன் குறித்து கூறிய ராணா கொரோனா பிரச்சனை மட்டும்  இல்லையென்றால் இன்னேரம் நான் ஆம்ஸ்டர்டாமில் இருந்திருப்பேன் என கவலையுடன் கூறினார். உடனே நேஹா தூபியா, ஹனி மூன் செல்வதற்கு ஆம்ஸ்டர்டாம் சிறந்த இடம் என்று கூறிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.