தொடர்புடைய செய்திகள்
- செல்போன் வாங்கி தரலைனா செத்துடுவேன்; மாணவியின் விபரீத முடிவு!
- பாஜக vs தேமுதிக - தமிழகத்தில் கிங் யாரு?
- பிள்ளையையும் கில்லி தொட்டிலும் ஆட்டும் நயினார்: இன்னும் பெருசு எதா வேணுமோ?
- தோனி சொல்லிதான் நாங்கள் சென்னையில் அதை செய்தோம்- சி எஸ் கே அணி நிர்வாகி பதில்!
- இதுக்கு இல்லையா ஒரு எண்டு? மீண்டும் உயரும் தங்கம் விலை!
29 ஆம் தேதியோடு முழுமையாக ஒழிகிறது இ-பாஸ் இம்சை??
இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என முதல்வர் விரைவில் ஆலோசித்து முடிவு என தகவல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த மாத 31 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவதால் அடுத்த என்னவென்ற ஆலோசனையில் முதல்வர் மருத்துவ குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஈடுபடவுள்ளார். அப்போது இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என முதல்வர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
