திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 மே 2020 (07:55 IST)

சிங்கம்பட்டி ஜமீன் மறைவு: இரண்டு நாள் கழித்து இரங்கல் தெரிவித்த சீமான்

இந்தியாவின் கடைசி குறுநில மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் சற்றுமுன் தனது டுவிட்டரில் சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு இரங்கல் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தின் கடைசி தமிழ்மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் மறைந்தார் என்று செய்தியறிந்து பெரும் துயருற்றேன். தன் எளிமையான அன்பால் மக்களின் மனதை வென்ற ஜமீன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன் என்று சீமான் தனது டுவிட்டில் கூறியுள்ளார்.
 
சிங்கம்பட்டி ஜமீன் காலமாகி இரண்டு நாட்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ள சீமானுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சீமானின் ஆறுதல் நிச்சயம் அவரது இழப்பால் வாடி நிற்கும் குடும்பத்திற்கு பேராதரவாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர்களை நேரில் சந்திக்கவும் சீமான் திட்டமிட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.