இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல்
இந்தியாவை சேர்ந்த ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக்குறைவால் மெகாலியில் இன்று காலமானார்- அவருக்கு வயது 95
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பல்பீர் சிங் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்ததாகவும், இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே கடந்த 12-ம் தேதி பல்பீர்சிங் அவர்கள் மாரடைப்பு காரணமாக மொஹலியில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் பல்பீரிசிங் இடம்பெற்றிருந்தார் இந்திய அணியின் வெற்றிக்கு இவரது ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் பல்பீர்சிங் அடித்த அதிக கோல்கள் என்னும் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர்சிங் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், விளையாட்டுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.