பாகிஸ்தான் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

pm modi
பாகிஸ்தான் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
Last Updated: வெள்ளி, 22 மே 2020 (19:04 IST)
பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இன்று மாலை பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற இந்த விமானம் கராச்சியில் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றியதாகவும், இந்த விமானத்தில் 100 பேர் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 91 பேர் இறந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும் உயிர்ச்சேதம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியிலும் இடிபாடிகளில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்டெடுப்பதிலும் தீவிரமாக உள்ளனர். இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியபோது, ‘விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு கவலையுற்றதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்த விபத்து குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :