திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (06:58 IST)

கமலுக்கு அரசியல் தேவையில்லை.. விஜய்யுடன் கூட்டணி: சீமானின் பரபரப்பு பேட்டி..!

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி விட்டது போல் கமல்ஹாசனுக்கும் அரசியல் தேவையில்லை அவரும் விலகிவிடலாம் என்று கூறிய சீமான் எதிர்காலத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது நான் அரசியல் களத்தில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். 2026 ஆம் ஆண்டில் விஜய் களத்தில் இறங்கினால் எங்கள் இருவரின் நோக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதால் சேர்ந்து பயணிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அதே நேரத்தில் என்னால் தனியாக பயணிக்க முடியும், விஜய்யும் என்னோடு சேர்ந்து பயணிக்க விருப்பம் தெரிவித்தால் எங்கள் இருவரது நோக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதால் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்.

நாங்கள் இருவருமே தமிழர்கள், எங்கள் உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது, எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை  என்று கூறினார்

ஆனால் அதே நேரத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் விஜய் மீது நெகட்டிவ் இமேஜ் இல்லாததால் அவரது கட்சி உடன் மட்டும் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Siva