திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (21:07 IST)

விஜய்யும் அம்பேத்கார், பெரியார், காமராஜரின் வழி நின்று தாக்கம் ஏற்படுத்துவார்- த.வெ.க, நிர்வாகி

vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
 
நடிகர் விஜய் அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது அரசியல் வருகை பற்றி சினிமாத் துறையினரும், அரசியல் பிரபலங்களும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே சினிமாவில் நடித்தபடி  விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந் நிலையில்,   பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கின் படி மக்களுக்கு உதவுவதற்காக அரசியலுக்கு வருவதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலின் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று   கூறியிருந்தார்.
 
இந்த நிலையில்,  தமிழக வெற்றிக் கழக செய்தித் தொடர்பாளர், அம்பேத்கர், பெரியார், காமராஜரின் வழி நின்று விஜய் தாக்கம் ஏற்படுத்துவார் என்று  கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
எம்.ஜி.ஆரின் முகத்திற்கென பெரும் மதிப்பு இருந்தது. அவர் அதை மட்டும் வைத்து வெல்லவில்லை. கட்சியின் நீண்ட நாட்களாகப் பயணித்திருந்தார்.  விஜய்யும் அம்பேத்கார், பெரியார், காமராஜரின் வழி நின்று தாக்கம் ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.