திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (06:50 IST)

விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம், எனக்கு அரசியல் ஆசை இருக்கு: வாணிபோஜன்

அரசியலில் விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்றும் எனக்கும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட ஆசை இருக்கிறது என்றும் நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.  

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல கட்சிகளுக்கு ஏற்கனவே நாம் வாய்ப்பு கொடுத்து விட்டோம், தற்போது விஜய்க்கும் அரசியலில் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.

எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது காலம் கனிந்தால் நானும் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அந்த வகையில் விஜய்யின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன் என்று வாணி போஜன் கூறினார்.

அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்,  நான் செங்களம் வெப் தொடரில் நடிக்கும்போது எனக்கும் அரசியலில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது,  அந்த ஆசை இப்போதும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Edited by Siva