கோயிலுக்கு சீல் வைப்பது தான் திராவிட மாடலா? சீமான் கேள்வி..!
விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு சீல் வைப்பது தான் திராவிட மாடலா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அருகே ஆதி தொல்குடி மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு முத்திரையிட்டு மூடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிய சீமான் சட்டத்தின் துணையோடு அவர்கள் வழிபாடு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுதான் சரியான நடவடிக்கைஇயாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் சாதியத்தையும் தீண்டாமையையும் சமரசம் இன்றி எதிர்ப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு சாதியவாதிகளின் செயலுக்கு துணை போகும் திமுக அரசின் இந்த செயல் இழிவான அரசியல் இல்லையா? திமுக அரசின் இத்தகைய சந்தர்ப்பவாதத்தின் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
Edited by Mahendran