வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (07:55 IST)

பேச்சுவார்த்தை தோல்வி: விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு..!

பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிப்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அந்த பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 
 
இதுவரை நடைபெற்ற ஏழு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இதனையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை கோவிலுக்குள் சீல் வைத்தார். மேலும் மேல்பாதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பட்டியலில் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மேல்பாதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva