வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (18:05 IST)

கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு: சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு.!

கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் வருமான வரித்துறை அலுவலகர்களால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 20 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran