திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:30 IST)

திருமகன் ஈவேரா என் கட்சியில் சேர்வதாக இருந்தார்: சீமான் பரபரப்பு பேட்டி!

Seeman
மறைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவேரா எனது கட்சியில் சேர்வதற்காக என்னை சந்தித்தார் என நாம் தமிழர் கட்சியின் சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஆன திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.  அவரது மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் ஈரோடு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா நடந்த நிலையில் அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோத், ‘மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்காக என்னை வந்து சந்தித்தார் என்று கூறினார்
 
அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த திருமகன் ஈவேரா பற்றி சீமான் பேசுவது அநாகரிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran