வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (11:06 IST)

பாஜகவிடம் பாதுகாப்பு கோறும் காங்கிரஸ்!

ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ்  தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம்.


ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நடைபயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் செய்த நிலையில் இப்போது இந்த நடை பயணம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.  

இந்நிலையில் காஷ்மீரின் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ராகுல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ்  தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீநகரில் நாளை மறுநாள் நடக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அதில், அடுத்த இரண்டு நாட்களில் யாத்திரையிலும், ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவின் உச்சக்கட்ட விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஸ்ரீநகரில் ஜனவரி 30 ஆம் தேதி யாத்திரை மற்றும் விழாவின் உச்சம் வரை போதுமான பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கார்கே அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.