வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (16:37 IST)

காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப் பயணம் நிறுத்தம்: என்ன காரணம்?

Rahul
ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நடைபயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் செய்த நிலையில் இப்போது இந்த நடை பயணம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 
 
இந்த நிலையில் காஷ்மீரின் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva