வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:25 IST)

நான் தான் சீனியர்: கமல் தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான்

இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மையம் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும்,  ரஜினி, சீமான் ஆகியோர் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 
கமலின் வேண்டுகோளுக்கு பதிலளித்த சீமான், 'நான் கட்சி ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. கமல் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகிறது. நான் அவரை விட வயதில் குறைவாக இருந்தாலும் அரசியலில் நான் தான் சீனியர். எனவே நான் அவரை ஆதரிக்க முடியாது, அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட சீமானின் 'நாம் தமிழர் கட்சி' சீமான் உள்பட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இந்த கட்சியின் ஆதரவை கமல் கேட்பதும், எந்த கட்சியும் கூட்டணிக்கு கூட கூப்பிடாத கமல் கட்சியிடம் சீமான் ஆதரவு கேட்பதும் அரசியல் காமெடியை தவிர வேறென்ன? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.