வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:50 IST)

ரஜினியின் ஆதரவோடு தனித்து போட்டி: கமல் வைக்கும் புது டிவிஸ்ட்!!

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்க துவங்கிவிட்டன. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 
 
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் உள்ளன.  
 
அதிமுகவில் உள்ள பாஜகவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுகவில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு மட்டுமே முடிவடைந்துள்ளது. தேமுதிகவின் நிலைபாடு மட்டும் குழப்பத்தில் உள்ளது. 
 
இந்நிலையில், எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல், கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட உள்ளது என்று கமல் ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறியிருந்தார். 
சமீபத்தில் அவர் வழங்கிய பேட்டியில், ரஜினியின் ஆதரவு எங்கள் கட்சியிக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது கேட்டு பெற வேண்டிய விஷயம் அல்ல. அவர்களாகவே தாமாக முன்வந்து கொடுப்பது. இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் 
 
ஆனால், ரஜினிகாந்த் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்றும் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.