வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:27 IST)

தேர்தலுக்கு பின் கமல்ஹாசனுக்கு மன உளைச்சல் ஏற்படும்: செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டால் தேர்தலுக்கு பின் கமல்ஹாசனுக்கு மன உளைச்சல் ஏற்படும் என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'இன்றைய நிலையில் தனித்து போட்டியிடுவது என்பது புத்திசாலித்தனமான விஷயம் இல்லை. கமல்ஹாசனுக்கு யாரோ தவறான அறிவுரையை கூறியுள்ளார். 
 
எதையும் ஆராய்ந்து செய்யக்கூடிய திறமை படைத்த கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பது தவறு. அவர் ஒரு சிறந்த தமிழ் நடிகர். அனைத்து திறமையையும் கொண்டவர். யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் கட்சி ஆரம்பித்துவிட்டு தற்போது மீண்டும் தவறான வழிகாட்டுதலால் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவருடைய நல விரும்பிகள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனை மாறி மாறி அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் திடீரென அறிவுரை கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது