1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2023 (15:12 IST)

அரசியலுக்கு வந்தால் விஜய் கூட கூட்டணி இல்ல..! – சீமான் உறுதி!

Seeman Vijay
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.



நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கடந்த பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக நடந்து வருகின்றன. விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பலமுறை கருத்து தெரிவித்திருந்தார்.

பல விஷயங்களில் விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஒருவேளை விஜய் கட்சி தொடங்கினால் சீமான் அவருடன் கூட்டணி அமைப்பாரா என்ற பேச்சும் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து கோவில்பட்டியில் பேசிய சீமான் “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. என்னுடைய கொள்கை வேறு அதில் சமரசமே கிடையாது. என் கருத்துக்கு வலு சேர்ப்பது போல விஜய் பேசியுள்ளதை மட்டும் வரவேற்கலாம்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K