திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (19:54 IST)

விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது - கரு பழனியப்பன்

நடிகர் விஜய்யின் பேச்சிற்கு பிரபல பேச்சாளரும் இயக்குனருமான கரு பழனியப்பன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,  நடிகர் விஜய் 'விஜய் மக்கள் இயக்க' நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று இந்த விழா சென்னையில், நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

‘’தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் உங்கள் பெற்றோரிடம் சென்று,  பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று  கூறுங்கள்.  நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள் வாக்களிக்க உள்ளீர்கள் என்று கூறினார்.

மேலும், நீங்கள் தான் நாளைய தலைமுறை வாக்காளர்கள் என்றும் அடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறி அவர் காமராஜர் அம்பேத்கார் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், பேச்சாளருமான கரு பழனியப்பன் நடிகர் விஜய்யின் பேச்சை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது ... ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார் .. அதைப்படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்... நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.