1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (11:54 IST)

திமுக அரசை எதிர்த்துப் போராட நடிகர் விஜய் முன்வர வேண்டும்: தமாகா கோரிக்கை..!

திமுக அரசை எதிர்த்து போராட விஜய் முன் வரவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 
 
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற கல்வி விழாவில் அவர் 1400 மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பேசிய போது அவரது பேச்சு அரசியலுக்கு வரும் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
 
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா எதிர்க்கட்சிகள் உடன் சேர்ந்து நடிகர் விஜய் திமுக அரசுக்கு எதிராக போராட முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
தேர்தலில் வாக்காளர்கள் யாரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தது மிகவும் நியாயமானது என்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் கூறினார்.
 
அரசியலுக்கு வர தயாராகும் நடிகர் விஜய் தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிக்கலுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
Edited by Siva