1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (21:22 IST)

விழா மேடையில் சோர்ந்துபோய் மேஜையில் சாய்ந்த விஜய்...

vijay
சமீபத்தில்,  நடிகர் விஜய் 'விஜய் மக்கள் இயக்க' நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று இந்த விழா சென்னையில், நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்த விழாவில் நடிகர் விஜய் ''மாணவர்களை ஊக்கப்படுத்தியும், ஓட்டிற்குப் பணம் வாங்கக்கூடாது என்று பெற்றோர்களிடம் கூறுங்கள்''; காமராஜர், அம்பேத்கார் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.  
 
இந்த விழா காலையில் இருந்து தொடங்கி 9  மணி நேரத்திற்கு  மேலாக  நடைபெற்று வருகிறது.  தற்போது, பெற்றோருடன் மேடைக்கு வந்த மாணவர் ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி அவருக்கு சான்றிதழ் வழங்கும்போது,  தொடர்ந்து நின்று கொண்டே இருந்த நடிகர் விஜய் சோர்வால் அருகில் இருந்த மேடையின் மீது சாய்ந்தார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.