வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 அக்டோபர் 2024 (07:09 IST)

விஜய் கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்து போகவில்லை.. அப்ப கூட்டணி கிடையாதா?

Seeman Vijay
விஜய் கொள்கை, எங்கள் கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதை அடுத்து, இரு கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுவது மற்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று விஜய் பேசியபோது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திராவிடம் மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாசிச ஆட்சியை எதிர்த்து பேசியது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என்று அவர் கூறியதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியம் குறித்து பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், திராவிடத்துக்கு எதிராகவும் பேசிவருகிறார். தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரு கண்கள் என்று விஜய் கூறும் கொள்கை எங்களுக்கு எதிரானது என்றும், அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப் போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜய் மற்றும் சீமான் இணைந்து போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.



Edited by Siva