7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவ காற்றால் தமிழகத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்றாலும் இன்னமும் வெப்பம் தாக்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நாளை தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது