1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (22:47 IST)

பிரபல நடிகரின் மகள் சீரியலில் இருந்து நீக்கம்...ரசிகர்கள் அதிர்ச்சி

சொல்லாமலே, சுந்தரப் புருஷன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா.

இவரும் நடிகை அம்பிகாவின் மகனும் ஒரு புதிய படத்தில் நடித்தனர், ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், பூவே உனக்கான என்ற தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனால் சில மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.  மேலும் இதுகுறித்து பரப்பான தகவல்கள் வெளியானநிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் , தனது மகள் சீரியலிலிருந்து வெளியேறியது குறித்து இப்போது கருத்துக்கூறி சம்பந்தப்பட்டவர்களமனம் கஷ்டப்பட எனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.