1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman demand relief fund for teachers

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் கோரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு நிதி வழங்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து ஒரு வருட காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இடையே பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் இரண்டாம் அலை பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா காரணமாக தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அதை சார்ந்த ஆசிரியர்களுக்கு துயர்துடைப்பு நிதி தமிழக அரசு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!” என கேட்டுக்கொண்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட் விலையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்: நாளை முதல் விற்பனை!