அதிகரிக்கும் கொரோனா; கோவை பறந்த உயரதிகாரிகள்! – மாநகர ஆணையருடன் ஆலோசனை!
கோவையில் கொரோனா பாதிப்பு சென்னையை விட வேகமாக அதிகரித்துள்ள நிலையில் உயரதிகாரிகள் கோவை விரைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே இதுவரை சென்னையில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று முதல் முறையாக சென்னையை விட கோவையில் கொரோனா மதிப்பு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்றைய நிலவரப்படி சென்னையில் 3561பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவையில் 4268 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையில் 5223 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். ஆனால் கோவையில் குணமாகி உள்ள எண்ணிக்கையை 2787 ஆக உள்ளது.
இந்நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பை குறைப்பது குறித்து ஆலோசிக்க சென்னையிலிருந்து உயரதிகாரிகள் கோவை சென்றுள்ளனர். கோவை மாநகர ஆணையருடன் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.