1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 27 மே 2021 (09:41 IST)

பொறுப்புடன் செய்தி போடுங்கள்: மீடியாவுக்கு வேண்டுகோள் விடுத்த காளிவெங்கட்!

பொறுப்புடன் செய்தி போடுங்கள் என நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தான் மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அதன்பின் மருத்துவ நண்பர் ஒருவர் உதவியுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் லெவல் குறைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்ததாகவும் ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ஒரு சில மீடியாக்கள் சில திடுக்கிடும் தலைப்புகளில் இந்த செய்தியை வெளியிட்டன. குறிப்பாக யூடியூப் மீடியாக்கள் அவர் கதறி அழுததாகவும், உச்சகட்ட ஆபத்திற்கு சென்றதாகவும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டதால் காளிவெங்கட் மிகுந்த வருத்தம் அடைந்தார்.
 
குறிப்பாக நேற்று ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் கொரோனா பாதித்து மருத்துவமனைகள் இடம் கிடைக்காமல் தவித்த  காளிவெங்கட், பகீர் வீடியோ என தலைப்பிட்டு இருந்தது. இந்த தலைப்பை பார்த்ததும் மிகவும் ஆதங்கத்துடன் டுவிட் ஒன்றை காளி வெங்கட் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருந்ததாவது: .8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க, முதல்ல வீடியோவ பாருங்க, தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம், அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன், அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு, எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்’ என்று கூறினார்,.