வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:47 IST)

என்கிட்ட ஒரு டேஷூம் இல்ல.. வீணா மோதாதீங்க! – ஜெயக்குமாருக்கு சீமான் எச்சரிக்கை!

ஜெயக்குமார் தன்னை பற்றி பேசியதாக நிருபர் கேட்ட கேள்விக்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் வைரலாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அவ்வபோது முன்னாள் ஆட்சியில் இருந்த அதிமுக, தற்போது ஆட்சியில் உள்ள திமுக உள்ளிட்டவை குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்களை வைத்து வருகிறார். சமீபத்தில் சீமானின் இந்த பேச்சுகள் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீமானுக்கு வாய்க்கொழுப்பு என்று கூறினார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்வினையாற்றிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் “எனக்கு வாய் கொழுப்பு என்றால், அவர்களுக்கு பணக்கொழுப்பு. இழக்க ஏதுமில்லாதவனிடம் மோத வேண்டாம். என்னிடம் ஒன்னும் கிடையாது. என்னிடம் மோதும் நீங்கள் பாஜகவிடம், திமுகவிடம் மோதுவீர்களா. அப்படி செய்தால் காலையிலேயே அவர் வீட்டுக்கு ரெய்டு வந்துவிடும். அதனால் என்னை அவர் பேசுகிறார். அண்ணன் என அவர் மீது வைத்துள்ள மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.