வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:53 IST)

கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை: ஜெயகுமார்

Jayakumar
சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் ஓபிஎஸ் பிரிவில் இருந்து கோவை செல்வராஜ் கலந்து கொண்ட நிலையில்,  அதிமுக எடப்பாடி பழனிசாமி பிரிவில் இருந்து கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘அதிமுகவிலிருந்து நாங்கள்தான் கலந்து கொண்டு உள்ளோம் என்றும் கோவை செல்வராஜ் எந்த கட்சியில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது என்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்
 
தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை செல்வராஜ் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது