தொடர்புடைய செய்திகள்
- கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை: ஜெயகுமார்
- பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு: முக்கிய அறிவிப்பு!
- டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு! – அதிர்ச்சியில் அதிமுக!
- தேர்தல் ஆலோசனை கூட்டம்: அதிமுக சார்பில் கோவை செல்வராஜ்!
- தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்: ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு இல்லை!
அதிமுக உட்கட்சி பிரச்சினை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!
அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் முக்கிய தகவல் அளித்துள்ளார்.
இன்று தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரிவில் உள்ளவர்கள் உள்பட பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தகுந்த நேரத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
