செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (13:21 IST)

தனிக்கட்சி துவங்கிட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கமல்: சீமான் கலாய்!

கமல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் குறித்து பேசினால் அவருக்கு எப்படி ஓட்டு கிடைக்கும் என சீமான் கேள்வி. 
 
இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆரை ஒரு கருவியாக பயன்படுத்து புகழ்ந்து பேசி வருகிறார். பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் கமலுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.