இதுதான் பகுத்தறிவா? கமலைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இதில் முதல் முதலாக மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ள நிலையில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.
தமிழகம் முழுவதும் இப்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் சமிபத்தைய புகைப்படம் ஒன்று இப்போது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
மேடை ஒன்றில் கமல் மட்டும் உட்கார்ந்திருக்க மற்ற கட்சி நிர்வாகிகள் எல்லாம் அவருக்குப் பின்னர் நின்று கொண்டு உள்ளனர். இதைப்பார்த்து பலரும் கட்சிக் காரர்களுக்கு இதுதான் மரியாதையா? தன்னை பகுத்தறிவு வாதியாகக் காட்டிக்கொள்ளும் கமல் இப்படி செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.