வருமானவரி பணத்தை திரும்ப அளிப்பதாக வரும் எஸ்.எம்.எஸ்! – வருமான வரித்துறை எச்சரிக்கை!
வருமானவரித்துறையால் ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்க கோரி போலி எஸ்.எம்.எஸ்கள் வருவதாக வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
வருமானவரித்துறை மாத ஊதியம் பெருபவர்களிடமிருந்து மாதம் தோறும் குறிப்பிட்ட சதவீத தொகையை டிடிஎஸ் என்ற பெயரில் பெறுகிறது. இந்த தொகை ஆண்டு இறுதியில் வருமானவரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு திரும்ப அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருமானவரித்துறை அனுப்பியது போன்ற போலி குறுஞ்செய்தி பலருக்கு அனுப்பப்படுகிறது. அதில் டிடிஎஸ் தொகை பெற ஒரு இணைப்பில் சென்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அது போலியான குறுஞ்செய்தி என்றும் வருமானவரித்துறையிலிருந்து அவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்றும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.