செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 மே 2025 (15:43 IST)

அரசியலுக்கு வந்தவுடன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட கூடாது: விஜய்க்கு சத்யராஜ் மகள் அறிவுரை..!

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவுடன் டாக்டராக முடியாது. அதேபோல், அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் முதலமைச்சராக முடியாது என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு, சத்யராஜ் மகள் திவ்யா அறிவுரை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார் என்பதும், அவருக்கு திமுகவில் ஒரு முக்கிய பதவி வழங்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
 
திமுகவில் இணைந்ததிலிருந்து, அவர் விஜய்யை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது "அரசியலுக்கு வந்தவுடன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
 
"மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவுடன் ஒருவர் டாக்டராக முடியாது. அனுபவம் இல்லாத டாக்டரிடம் செல்வது ஆபத்து. அதே போல், அரசியலுக்கு வந்தவுடன் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது. அனுபவம் இல்லாத முதலமைச்சருக்கு மக்கள் தேவைகள் பற்றிய புரிதல் இருக்காது," என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran