வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (23:09 IST)

நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுப் பொருட்களை கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன்

karur
கரூர் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுப் பொருட்களை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்நாதன் அவர்கள் வழங்கினார்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பாக கரூர் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுப் பொருட்களை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்நாதன் அவர்கள் வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியை மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் வழக்கறிஞர் லூர்து சாவியோ ஏற்பாடு செய்திருந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத் ,மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், நகரத் தலைவர்கள் ரவி, கார்த்திகேயன், மகளிர் அணி தலைவி லலிதாதேவி, வழக்கறிஞர் அணி தலைவர் உமாதேவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.