1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools to open on January 4 Teachers Association request

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

Teachers Association
2020 ஆம் ஆண்டின் முதல் வேலைநாளை புத்துணர்வுடன் தொடங்க எற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்புள்ளது எனவே, ஜனவரி 3 ஆம்தேதிக்கு பதிலாக ஒரு நாள் தள்ளி ஜனவரி 4 ஆம் தேதி திறந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்தால் இது குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ... கட்சியிலிருந்து நீக்கம் !