1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (20:40 IST)

விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறையில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
வகுப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு மட்டும்தான் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பதில் வருகிறது. கல்வித்துறையின் சுற்றறிக்கை மீறி செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.