1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools holiday for one week in Delhi,

ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பள்ளிகள்
ஒருவாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு காரணமாக பெரும் பிரச்சினையாகி உள்ளது என்பதும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டு இணையதளங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நவம்பர் 15 முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் வழியாக பள்ளி குழந்தைகள் பாடங்களைப் படிக்கலாம் என்றும் அசுத்தமான காற்றை மாணவர்கள் சுவாசிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!