செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:07 IST)

ராஜராஜசோழன் சதயவிழா! – தஞ்சாவூரில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

தஞ்சையில் ராஜராஜசோழன் சதயவிழாவை ஒட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐப்பசி சதயத்தில் தஞ்சையை ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக ஆண்ட ராஜராஜ சோழனுக்கு சதயவிழா எடுத்துக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 1036வது சதயவிழா நாளை நடைபெறுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.