திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:22 IST)

சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? கலெக்டர் அறிவிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தீபாவளிக்கு முன்பு இருந்தே மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் இன்றும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனமழை தற்போது குறைந்து விட்டாலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் அடையாததால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது