1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:12 IST)

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர்.. தற்கொலை செய்த மாணவர்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை முடிவெட்டிவிட்டு வர சொன்னதை அடுத்து  அந்த மாணவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் அதிக முடியுடன் வந்ததை அடுத்து முடிவெட்டி விட்டு தான் வகுப்பறைக்கு வர வேண்டும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்த நிலையில் மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல் செய்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran