வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:44 IST)

பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்.. பள்ளியாக மாறிய கோயில்..!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள கோவில் பள்ளியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்ததை அடுத்து அங்குள்ள முள்ளிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. 
 
மழை நீர் வகுப்புகளிலும் புகுந்து விட்டதை அடுத்து அங்கு பயலும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் தற்காலிகமாக பாடம் படித்து வருகின்றனர். மழை காலங்களில் ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடிப்பதால், பள்ளியை பராமரிப்பு பணி செய்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
Edited by Mahendran