திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (11:29 IST)

பேமிலி மேன் இயக்குனர்களின் அடுத்த வெப் தொடரில் ரெஜினா!

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே மற்றும் சமந்தாவுக்குக் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இயக்குனர்களின் அடுத்த தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த தொடரில் ஷாகித் கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கும் நிலையில் இப்போது ரெஜினாவும் இணைந்துள்ளார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இப்போது மும்பையில் இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர்.