1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India increases

29 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக உயர்ந்தது. புதிதாக 290 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,658  ஆக உயர்ந்தது.
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,046 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,76,319 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,442  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்று விலை உயர்ந்தது தங்கம்!