வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (17:33 IST)

சென்னையில் பள்ளி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. க்ளீனர் கைது..!

சென்னையில் 9 வயது சிறுமி பள்ளி பேருந்தில் பயணம் செய்த போது அந்த பேருந்தில் பணிபுரிந்த கிளீனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சென்னை பூந்தமல்லி அருகே தனியார் பள்ளியில் 9 வயது மாணவி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தினமும் பள்ளி பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பேருந்தில் கிளீனர் ஆக பணிபுரியும் 38 வயது ஞானசேகர் என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது 
 
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர் 
 
இது குறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva