திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (17:20 IST)

தேர்தல் பத்திரம் மூலம் திமுக வாங்கியது ரூ.639 கோடி? அதில் ஒரே நபரிடம் ரூ.509 கோடி?

தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா கட்சி ரூ.6986 கோடி வாங்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்தெந்த கட்சிகளுக்கு  எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இந்த தகவலில் திமுக மொத்தம் ரூ.639 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்றுள்ளதாகவும் அதில் ஒரே நபரிடம் மட்டும் 539 கோடி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலில் மேலும் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,334.35 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,397 கோடி கிடைத்துள்ளது.

மேலும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,322 கோடி பெற்றுள்ளது. அதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ.949 கோடி நிதி கிடைத்துள்ளது  

Edited by Siva