1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (14:00 IST)

வகுப்பறை கட்டிடம் இடிந்து தரைமட்டம்: விடுமுறை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

வகுப்பறை கட்டிடம் இடிந்து தரைமட்டம்: விடுமுறை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வானரயம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 57 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கொரோனா காரணத்தால் கடந்த இரண்டு வருடம் பள்ளியில் செயல்படாத நிலையில் தற்போது நவம்பர் மாதம் 1ஆம் தேதியில் தமிழக அரசு பள்ளிகள் திறக்கப்பட்டது
 
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை காரணத்தாலும் தீபாவளி விடுமுறை காரணத்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கப்பட்டது
 
இந்த நிலையில் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் வானரயம் கிராமத்தில் உள்ள பள்ளி கட்டிடம் பழைய பள்ளி கட்டிடம் என்பதால் மழையின் காரணத்தால் சுவர்கள் தண்ணீரில் ஊறி இன்று திடீரென இடிந்து விழுந்தது.  பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் உயிரினங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.