செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (07:04 IST)

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

கனமழை காரணமாக சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை எவை எவை என்பதை தற்போது பார்ப்போம்
 
பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி,
 
பள்ளிகள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சேலம், கடலூர், நெல்லை, அரியலூர்