1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (07:15 IST)

ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்

ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்
சென்னை உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன என்பதும் இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையத்தின் ரெட்அலர்ட் இல்லை என்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
எனவே கோவை மாவட்டத்தில் வழக்கம் போல் என்று பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்